Sunday, February 9

மகாலிங்கம், ஆறுமுகம்

0

கோயிற்கடவை, துன்னாலை மத்தி, கரவெட்டி என்னும் இடத்தில் 1919.15.03 பிறந்தவர். நாடக நடிகன், அண்ணாவியார். சிறுவயது முதல் நாடகத்துறையில் அதிக ஈடுபாடு கொண்டமையினால் அத்துறையில் தன்னை அர்ப்பணித்தார். இவரது நடிப்பாற்றல் காரணமாக “கண்டியரசன்“ “நடிக இசைவேந்தன்” என்னும் பட்டங்கள் இவரை அலங்கரித்தன. இன்றும் இவரது மறைவின் பின்பும் கண்டியரசன் மகாலிங்கம் என்றால் அறியாதோர் இல்லை எனலாம். கண்டியரசனுக்குப் பொருத்த மான உடல்வாகும், நடிப்புத்திறனும் ஒருங்கே சேர்ந்து இவரிற்கு பெருமதிப்பைத் தந்தது எனலாம். இவரை இத்துறையில் பிரகாசிப்பதற்கு வழிகாட்டியாக இருந்த குருமார்களாக அண்ணன் அமரர் பபூன் சிதம்பரப்பிள்ளை, சுபத்திரை ஆழ்வார் போன்றோரைக் குறிப்பிடலாம்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!