1926-06-27 ஆம் நாள் யாழ்ப்பாணம் – திருநெல்வேலி என்ற இடத்தில் பிறந்த இவர் ஈழத்துச் சிறுகதைக்கு வளம் சேர்த்த ஒருவர்.சம்பந்தனவர்களை குருவாகக்கொண்டு எழுத்துலகை நேசித்தவர். நாவல்கள், கட்டுரைகள் எழுதுவதிலும் ஆற்றுலுடையவராகத் திகழ்ந்தார். 1940 களில் ஈழகேசரி பத்திரிகையின் மூலம் படைப்புத்துறைக்குள் புகுந்து கொண்டவர். அந்தக்காலம், முதலிரவு, இதயத்துடிப்பு, வேதனைச்சுடர் ஆகிய சிறுகதைகளை ஈழகேசரியிலும், மறுமலர்ச்சியில் அவன், உலகக் கண்கள் , கலைச் செல்வியில் பொத்தல், நாகதோ~ம் ஆகிய சிறுகதைகளையும் எழுதியுள்ளார். இவரதுசிறுகதைகள் தொகுக்கப் பெற்று சொந்தமண் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 1998-04-24 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.