Thursday, January 16

செல்லையா, தம்பையா

0

1892-05-04 ஆம் நாள் யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை கீரிமலை என்னும் இடத்தில் பிறந்தவர். மிகச் சிறந்த மரபு வழி நாடகக்கலைஞர். 1950 ஆம் ஆண்டு காலகட்டங்களில் வாழ்ந்த அண்ணாவியார வர்கள் பலதரப்பட்ட புராண, சரித்திர நாடகங்களை மேடையேற்றிய பெருமைக்குரியவர். இளவாலை மெய்கண்டான் வித்தியாசாலையில் பண்ணிசை ஆசிரியராகவும், கோவில்களில் பண்ணிசைக் கச்சேரி நடத்துவதிலும் பெரும்புகழ்பெற்றவர். அயலூரான இளவாலையில் பெரும் பணக்காரன் பாலி அடைப்பானையும், அவன் காவலர்கள் இருவரையும் பணத்திற்காகக் கொலைசெய்த நிகழ்வினை “யாழ்நகர் கோரச்சிந்து” என்னும் முக்கொலை இலக்கியமாகப்பாடி நூ லாக்கம் செய்து மேலும் பெரும் புகழ் பெற்றார்.சிறுத்தொண்டர், சத்தியவான் சாவித்திரி, பூதத்தம்பி, ஸ்ரீவள்ளி ஆகியன இவருக்குப் புகழ் சேர்த்த நாடகங்களாகும். இவரது புதல்வனான பொன்னுச்சாமி என்பவர் சிறந்த நாடக நடிகராகவும், ஆர்மோனிய வித்துவானாகவும் புகழ் பெற்றிருந்தமையும் குறிப்பிடத் தக்கது. 1980.11.15 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!