Saturday, November 2

இராஜேஸ்வரன், நல்லரசு

0

1956.03.30 ஆம் நாள் யாழ்ப்பாணம்- நல்லூர் என்ற இடத்தில் பிறந்தவர்.1979 முதல் நாதஸ்வர தவில் தனிக்குழு அமைத்து நாதஸ்வர வித்துவான் பீ.எஸ். பிச்சையப்பா அவர்களின் ஆசியுடன் பல தேவஸ்தானங்களைத் தனதாக்கிக் கொண்டவர். யாழ். நகரில் 13 தேவஸ்தானங்கள் இவரை தமது ஆஸ்த்தான வித்துவானாக நியமித்து கௌரவப்படுத்தியுள்ளனர். 30 வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக நாதஸ்வர இசைக்கலையில் நேர்மையுடன் பயணித்து தனது இசைப் புலமையால் ஆலயங்களிலும், திருமண வைபவங்களிலும் ஏனைய சமூக நிகழ்வுகளிலும் தனது இசை ஆளுமையை வெளிப்படுத்தியமைக்கு சான்றாக நல்லை ஆதீனம் வழங்கிய பாராட்டுக்கள் கௌரவிப்புகளில் வயது குறைந்த வித்துவான் என்ற சிறப்புக்குரியவர். மேலும் நல்லூர் கலாசாரப் பேரவையினர் தமது வருடாந்த கலாசார விழாவில் கௌரவம் வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது. 2010.09.14 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!