Thursday, January 23

மகாதேவா, இளையப்பா (தேவன்)

0

1924-09-27 ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். ஈழத்து எழுத்தாளரும், பேச்சாளரும், ஆசிரியரும் ஆவார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் ஆசிரியரான இவர் புதினங்கள், நாடகங்கள், சிறுகதைகள், அறிவியல் புதினங்கள், கட்டுரைகள் எனப் பலதும் எழுதி வந்தவர். 1944 ஆம் ஆண்டு முதல் எழுதி வந்தார். யாழ்ப்பாணம், நாவலர் வீதியில் வாழ்ந்து வந்தவர். இவர் எழுதிய சிறுகதைகள் ஈழகேசரி, சுதந்திரன், வீரகேசரி, தினகரன், ஈழநாடு, பிரசன்ன விகடன், கலைச்செல்வி முதலான இதழ்களில் வெளிவந்துள்ளன. “காந்தியக் கதைகள்” என்ற தொகுதியிலும் (1969) இவரின் சிறுகதைகள் இடம்பெற்றன. யாழ்ப்பாண எழுத்தாளர் சங்கத்தின் உபதலைவராகவும் செயற்பட்டிருக்கின்றார். அக்காலத்தில் ஆனந்த விகடன் இதழின் ஆசிரியராக இருந்த நகைச்சுவை எழுத்தாளர் தேவனிடம் இருந்து வேறுபடுத்துவதற்காக தேவன் – யாழ்ப்பாணம் என்ற பெயரைத் தன் புனைப் பெயராக வைத்துக் கொண்டார். டிரசர் ஐலண்டு என்னும் பிரபல ஆங்கிலப் புதினத்தை “மணிபல்லவம்” என்ற பெயரில் தமிழாக்கம் செய்து வெளியிட்டார். இந்நூல் அக்காலத்தில் உயர்தர வகுப்புப் பாடப் புத்தகமாகப் பயன்படுத்தப்பட்டது. தென்னவன் பிரமராஜன், விதி, இரு சகோதரர்கள், பத்தினியா பாவையா, வீரபத்தினி, நளதமயந்தி ஆகிய நூல்களையும் வாடிய மலர்கள், மணிபல்ல வம், கேட்டதும் நடந்ததும் (1956, 1965), அவன் சுற்றவாளி (குறும் புதினம், 1968) ஆகிய புதினங்களையும் தேவன் – யாழ்ப்பாணம் சிறுகதைத் தொகுதியினையும் வானவெளியில் (அறிவியல் கட்டுரைகள், 1958) நூல்களையும் வெளியிட்டுள்ள இவர் 1982-12-25 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!