வட்டுக்கோட்டை என்னும் ஊரில் பிறந்த இவர் வட்டுக்கோட்டை கலா நிலையம் என்கின்ற கலைசார் நிறுவனமொன்றினை நிறுவி அதனூடாக கலைப்பணியாற்றியவர். ஆங்கிலமொழியில் பாண்டித்திய முடைய இவர் ஷேக்ஸ்பியர் ஆங்கிலமொழியில் எழுதிய ஒதெல்லோ என்னும் அவலச்சுவை நாடகத்தினை சதியா விதியா என்றபெயரில் தமிழில் தழுவல் நாடகமாக எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.