1917-02-19 ஆம் நாள் ஏழாலை என்னும் ஊரில் பிறந்தவர். சைவத்தமிழ் அறிவியற் பண்பாட்டியக்கம், 1999 இல் சனாதனசைவ விளக்கம், சைவசித்தாந்த விளக்க விருத்தியில் யாழ்ப்பாண அறிவியல்மேதையின் சுவடுகள், 1978 இல் சித்தாந்த செழும்புதையல்கள் 1998 இல் சைவசித்தாந்த நோக்கில் கைலாசபதி ஸ்மிருதி, 1997 இல் திருக்குறிப்புத் தொண்டநாயனார் புராணம் ,அரியவும் பெரியவும் – பகுதி 1,2,3 போன்ற பல நூல்களை யாத்து தமிழிற்குப் பெருமை சேர்த்தவர். சைவத்திற்கும், தமிழிற்கும் ஆற்றிய தொண்டினைப் பாராட்டி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் கௌரவ இலக்கிய கலாநிதிப்பட்டம் வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது. சைவசித்தாந்த ஆய்வினை பல வருடங்களாக மேற்கொண்டு இத்துறை சார்பான பல ஆய்வாளர்களை உருவாக்கிய சிறப்பிற்குரிய வர். 2002-07-10 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.