நீர்த்தொட்டி போன்றே ஆவினங்கள் தமது உடலைத்தேய்த்து தம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஆவுரஞ்சிக்கல் அமைக்கப்பட்டுள்ளது. இவை வண்டில் மாட்டிற்கு மட்டுமன்றி அவ்வழியால் மேய்ந்து செல்லும் ஆவினங்கள் அனைத்திற்கும் உதவிபுரிவனவாக உள்ளது. உயிரினங்களை நேசிக்கும் தமிழர் தம் பண்பாட்டை எடுத்தியம்புவனவாக அமைகின்றன. இவை யாழ்ப்பாணத்து நாற்சார், எட்டுசார் வீடுகளின் வாயிலில் அமைக்கப்பட்ட சங்கடம்படலையின் அருகாமையிலும் காணப்பட்டுள்ளன. இப்பண்பை வேறெந்த வளர்ச்சியடைந்த நாடுகளிலும் காணமுடியாது.