Friday, February 14

வரதராஜன்,சின்னத்துரை

0

 

1951-12-07 ஆம் நாள் யாழ்ப்பாணம் உரும்பிராய் ஊரெழுப்பதியில் சின்னத்துரை மகேஸ்வரி தம்பதி களின் புதல்வனாக அவதரித்தார்.தனது தந்தையாரின் தொழில் நிமித்தம் தனது ஆரம்பக் கல்வியை திருகோணமலை இந்துக் கல்லூரியில் 8 ஆம் தரம் வரையும் கற்றுப் பின்னர் யாழ்ப்பாணம் வைத்தீஸ்வரக் கல்லூரியில் உயர்தரம்வரை கற்று 1972 இல் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவானார். தனது உயர்தர வகுப்பில் பொருளியலை ஒரு பாடமாகக் கற்காது பல்கலைக் கழகத்திலே பட்டப்படிப்பில் ஒரு பாடமாகத் தெரிவு செய்து கற்றார். இவரது புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தினால் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிவிட்டு பெறுபேறுகள் வரும்வரை ஸ்ரீலங்கா புத்தகசாலையில் வேலைசெய்தார். பல்கலைக்கழகம் சென்ற இவர் அங்கு பொருளியலை தனது கற்கையாகத் தெரிவு செய்தார். பல்கலைக்கழக வாழ்வில் கல்வி மட்டுமன்றி கலை, பண்பாடு, அரசியல் விவகாரங்களிலும் தனது முழுமையான பங்களிப்பினை வழங்கினார். 1976 இல் பட்டப்படிப்பை முடித்து பேராதனைப் பல்கலைக்கழக வரலாற்றில் இரண்டாம் தரஉயர்நிலை சித்திபெற்ற நான்காவது தமிழ் மாணவன் என்னும் பெருமையுடன் பொருளியல் விரிவுரையாளராக பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். எந்த ஒரு சிறுகுறிப்பும் கையில் இல்லாமல் பாடத்தினை கற்பிப்பதில் வல்லமை பெற்றிருந்தார். தனது பல்கலைக்கழக சகபாடியான சகுந்தலா என்பவரை காதலித்து திருமணபந்தத்தில் இணைந்த இவருக்கு இரண்டு பிள்ளைகள். 1982 இல் தனது கொள்கைகளுக்கு பல்கலைக்கழக தொழில் இடையூறாக அமையும் என எண்ணிய ஆசிரியரவர்கள் 1982 இல் விரிவுரையாளர் பதவியைத்துறந்து தனியார் கல்வி நிலையங்களில் பொருளியல் கற்பிக்கும் நிபுணராக தன்னை மாற்றிக்கொண்டார். தனியார் கல்வி நிலையங்களில் தனது முழுக்கவனத்தையும் செலுத்திய இவர் அதற்காகவே தன்னை அர்ப்பணித்தார். யாழ்ப்பாணம் ஸ்ரீதர் படமாளிகைக்கு முன்னால் அமைந்திருந்த டீநஉழn என்னும் தனியார் கல்வி நிலையத்தில் இருந்த பொருளியல் மாணவர்களுக்கு கலங்கரை விளக்காக விளங்கினார். யாழ் சென்ஜோன்ஸ் கல்லூரிக்கு முன்பாக உள்ள தனது இல்லத்தில் பிரத்தியேக வகுப்புக்களை நடத்தும் வகையில் பொருளியில் கல்லூரி என்ற நிறுவனத்தினை ஆரம்பித்தார். நாட்டின் சூழ்நிலைகளால் இக்கல்லூரி வேறு ஒருவரினால் நிருவகிக்கப்படும் நிலை உருவாகியது. இங்கு அவர் ஒரு ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் னுஊஆ என்ற கல்வி நிறுவனத்தினை ஆரம்பித்து இரு கல்வி நிலையங்களிலும் பணியாற்றினார். தமிழையும் தமிழ்த்தேசியத்தையும் நேசித்த ஒருவர். பொருளியல் பேராசான் தனது அரசியல் செயற்பாடுகளில் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பிரதான வேட்பாளராகப் போட்டியிட்டிருந்தார். துர்ரதிஸ்டம் அவரால் வெல்லமுடியாமல் போனமையாகும். அதனால் துவண்டு போகாமல் சளைக்காது தமிழ்த்தேசியத்திற்காக தனது வாழ்வை அர்ப்பணித்தார். தனது தமிழ்த்தேசியக் கொள்கைகளுக்காக விரிவுரையாளர் பதவியைத்துறந்து தனியார் கல்வி நிலையங்களில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மாணவர்களின் கல்விக்காக தன்னை அர்ப்பணித்து உழைத்த மாபெரும் பொருளியல் பேராசான் 2014-09-18 ஆம் நாள் வாழ்வுலகைநீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!