யாழ்ப்பாணம்- வேலணை மேற்கு என்னுமிடத்தில் பிறந்தவர். உரிய காலத்தில் வித்தியாரம்பம் செய்யப்பெற்றதுடன் சமய தீ;ட்சை பெற்று சைவ அனுட்டான சீலராய் விளங்கினார். தமிழ், இலக் கண இலக்கியத்திலும் ஆங்கிலத்திலும் சிறந்த புலமையுடைய வராகவும் விளங்கினார். டச்சுக்காரர்களுடைய அரசாங்கத்தில் முதலியாராகப் பதவியேற்று இலங்கையின் பல பாகங்களிலும் கடமை யாற்றி வந்தாலும் இறைசிந்தை நிறையப் பெற்றவராக விளங்கினார். கடையிற்சுவாமிகளால் ஆட்கொள்ளப்பட்டு திருவருட்கடாட்சம் பெற்றவர்.அருளம்பல சுவாமிகளை தமக்கு அடுத்த நிலையுடையவராக உருவாக்கினார். சுவாமிகள் தமது இறுதிக் காலத்தினை யாழ்ப்பாணம்- வண்ணார் பண்ணையிலுள்ள உறவுமுறைச் சகோதரி வீட்டில் கழித்தார். 1909ஆம் ஆண்டு கீலக வருடம் பங்குனி மாதம் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை உத்தரட்டாதி நட்சத்திரம் கூடியவேளையில் மகாசமாதி நிலையடைந்தார்.