கடையிற் சுவாமிகளுடைய நேர் சீடராக விளங்கியவர் செல்லப்பா சுவாமிகளாவார். இவர் யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டையில் வேளாண்iமையில் சிறந்து விளங்கிய வல்லிபுரம் என்பவருக்கு 1860 ஆம் ஆண்டு பிறந்தவர். கந்தர்மடம் சைவப்பிரகாச வித்தியாசாலையில் ஆரம்பக் கல்வியை கற்று பின் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் ஆங்கிலம் கற்பதற்காகச் சென்றார். கல்வியின் பின்னர் யாழ்ப்பாணம் கச்சேரியில் ஆராய்ச்சி உத்தியோகத்தராகப் பணியாற்றினார். ஆரம்பத் திலிருந்தே அகதத்pலும் புறதத்pலும் தெயவ்கீ நாட்ட மேற்பட முருகப்n;பருமானை பிதாவே பிதாவே என அழைத்து வந்தார். காலப்போக்கில் தமது உத்தியோகத்தினைத் துறந்து நல்லூரடியிலுள்ள தமது குடிசையின் ஒரு மூலையில் அமர்ந்தார். உள்ளத்தில் எழுந்த துறவு மனப்பான்மையால் உலகத்தை அறவே துறந்த சுவாமிகள் வெளியுலகிற்கு விசரனாகவும் ஆன்ம ஈடேற்றம் கருதிய பெரியோர்களுக்கு ஞானியாகவும் காட்சியளித்தார். தமது ஞானத்தினால் பின்னால் அமையப்போகும் நல்லது கெட்டதுகளை முன்னதாகவே நன்குணர்ந்தறியும் ஆற்றலுடைய சுவாமிகள் தம்மை நாடிவருவோரின் துன்பங்களைத் தீர்த்தருளியவர். நல்லூர் வைமன் வீதியில் இளைஞனை காளைமாடு முட்டப்போவதனையும், சுவாமிகளிடம் உணவு வாங்கியுண்ட குட்டிநாய் காரில் அடிபடப்போவதனையும்,பக்தன் ஒருவன் வழங்கிய உணவு எச்சில்பட்டுள்ளது என்பதனையும் முன்னதாகவே அறிந்து தெரிவித்திருந்தார். அதுமட்டுமா காற்படி அரிசியை சமைத்து நால்வர் உட்கொண்ட அற்புதங்களையும் புரிந்திருந்த சுவாமிகள் சீவன்முத்தராய் இணைந்தோர் தன்மையில் வாழ்ந்து நல்லூரான் தேரடியிலிருந்து அடியார் பலருக்கும் ஆத்மபோதம் ஊட்டி அரும்பெரும் சீடராக யோகசுவாமிகளையும் உருவாக்கினார். “ஒருபொல்லாப்பும் இல்லை”, “முழுவதும் உண்மை”, “நாமறியோம்”, “ஆரறிவார”;, “எல்லாம் எப்பவோ முடிந்த காரியம்” போன்ற ஆத்ம வாக்கியங்களை உலகமெல்லாம் ஒலிக்கச்செய்து 1915 ஆம் ஆண்டு பங்குனி மாத அச்சுவினி நட்சத்திரத்தில் வெள்ளிக்கிழமை இரவுவேளையில் மகாசமாதி நிலையடைந்தார்.