Tuesday, February 18

கந்தசுவாமி கோயில் – இணுவில்

0

1891 ஆம் ஆண்டளவில் பெரிய சந்நியாசியார் என அழைக்கப்பட்ட ஆறுமுகம் சந்நியாசியார் இக் கோயில் திருப்பணிகளில் ஈடுபடலானார். இவரது முயற்சியினால், இக்கோயிலுக்காக மஞ்சவாகனம் ஒன்றைச் செய்யும் பணிகள் 1910 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டன. இந்தியாவில் இருந்து அழைத்துவரப்பட்ட சிற்ப வல்லுநர்கள் இப் பணியில் ஈடுபட்டனர். உலகப் பெருமஞ்சம் என ஊரவர்களால் குறிப்பிடப்படும் இப்புகழ்பெற்ற மஞ்சம் 1912 ஆம் ஆண்டில் வெள்ளோட்டம் விடப்பட்டது. ஜ4ஸ வேறு அடியவர்களின் முயற்சியினால் 1905-1909 காலப்பகுதியில் கோயிலுக்காக மூன்று தளங்களைக் கொண்ட கோபுரமும் அமைக்கப்பட்டது. 1946 ஆம் ஆண்டளவில் மணிக்கோபுரங்களையும் கட்டினர். 1967 இல் கருவறைக்கு இரண்டு தளங்களை செகராசசேகரப் பிள்ளையார் கோயில்  இலங்கையின் வடபகுதியில், யாழ்ப்பாண நகரத்துக்கு அண்மையில் உள்ள இணுவில் என்னும் ஊரில் அமைந்துள்ள ஓர் கோயில். 13 ஆம் நூற்றாண்டு முதல் 1620 ஆம் ஆண்டுவரை யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்தி வம்சத்து அரசர்களின் சிம்மாசனப் பெயர்களில் ஒன்றான “செகராசசேகரன்” என்னும் பெயரைத் தழுவிய பெயர்கொண்ட இக்கோயில், தொடக்கத்தில் அக்கால மன்னர்களில் ஒருவரால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இக்கோயிலுக்குப் பருத்தியடைப்புப் பிள்ளையார் கோயில் என்றபெயரும் வழங்கி வருகிறது. செகராசசேகர மன்னனால் கட்டப்பட்டதாகக் கருதப்படும் இக்கோவில், யாழ்ப்பாண இராச்சியத் தொடக்க காலத்தில் இணுவில்பகுதித் தலைவனான பேராயிரவரும், அவர் வழிவந்தவர்களும் வழிபாடாற்றி வந்ததாகத் தெரிகிறது.1620 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போர்த்துக்கேயர் அங்கிருந்த எல்லா இந்துக் கோயில்களையும் இடித்துவிட்டனர். அப்போது யாழ்ப்பாண மன்னர்கள் கட்டுவித்தசெகராசசேகரப் பிள்ளையார் கோவிலும் அழிந்து விட்டது. ஏறத்தாழ இரண்டரை நூற்றாண்டுகள் கழிந்த பின்னர் இலங்கையைப் பிரித்தானியர் ஆண்ட காலத்தில் இக் கோயில் மீளக் கட்டப்பட்டது. சென்ற நூற்றாண்டுத் தொடக்கத்தில் சிறிய அளவிலான சாந்துக் கட்டடமாக இருந்த இக்கோயில் இப்போது பொளிகற்களால் கட்டப்பட்ட அர்த்த மண்டபம், மகா மண்டபம், வசந்த மண்டபம் என்பவற்றை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!