17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஊர்ப்பெரியார் திரு.ஐயம்பிள்ளை கைலாயர் அவர்களால் பாலை, கொன்றை, மருது மரங்கள் செறிந்த சோலை நிறைந்த பாலை விருட்சத்தின் கீழ் கண்ணகி அம்மனை ஸ்தாபனம் செய்து சிறு கோயிலமைத்து மக்கள் வழிபட வழியமைத்தார். அவரது காலத்தில் சாஸ்திர ரீதியாக கோபுரமும் மகாமண்டபமும் அமைக்கப்பட்டது. 1814 ஆம் ஆண்டில் இத்திருப்பணிகளின் பதிவுகள் மகா மண்டப வாயிற் கதவின் படிக்கல்லில் பொறிக்கப்பட்டிருப்பதனைக் காணலாம். 1925 இல் கைலாயரின் மகனான கைலாயர் ஐயம்பிள்ளை என்பவர் பரிபாலனம் செய்தார். 1939இல் சுண்ணாம்புக் கற்களாலான கட்டடங்கள் இடிக்கப்பட்டு வைரக்கற் களால் கோபுரத்துடன் கூடிய மூலஸ்தானம் வைரவ ஆலயத்துடன் அமைக்கப்பெற்றது. 1847இல் உருவாக்கப்பட்டதாகக் கருதப்படும் இவ்வாலத்தேரானதுமிகவும் உயரமானதும் பழமை வாய்ந்ததுமாகும்.காலப்போகக்கில் மூலமூர்த்தியாக மகேஸ்வரி அம்பாள் ஸ்தாபனம் செய்யப்பட்டு கண்ணகி அம்பாளுக்கு தனியான வழிபாட்டு இடம் அமைக்கப்பட்டது. வடமேற்குப் பக்கமாக கோபுரத்துடன்கூடிய முருகன் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.வருடம்தோறும் ஆனி மாதத்தில்வருகின்ற பூரணைத் திதியை தீர்த்தோற்சவமாகக் கொண்டு பத்துத் தினங்கள் மகோற்சவம் நடைபெறுவது வழக்கம்.